பவர் ஸ்டார் கலக்கும் கண்ணா லட்டு தின்ன ஆசையா

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயின்டே பவர் ஸ்டார்தான்! தியேட்டரில் பவர் ஸ்டார் என்ட்ரி ஆகும்போது எழும் ஆரவாரம், நிச்சயம் அவரால் செட்டப் பண்ணி அனுப்பப்பட்ட ஆட்கள் அல்ல.

நிஜமாகவே அதகளம் பண்ணியுள்ளார் பவர் ஸ்டார்!

முதல் காட்சியே படம் சூப்பர் ஹிட் என்பதற்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது.

பேரிளம் யூத்தாக வரும் பவர் ஸ்டார், பள்ளி மாணவியை சைட் அடிக்க தொடங்கும் காட்சியில் (உங்களை எங்க அப்பா-அம்மா திருமண போட்டோவில் பார்த்திருக்கேன்) இருந்து, பவர் ஸ்டாரின் ஒவ்வொரு அசைவுக்கும், ஒவ்வொரு முகபாவத்துக்கும் விசில் ஒலி காதை பிளக்கிறது. திரையில் நாலைந்து கேரக்டர்கள் தோன்றும் சீனில் கைதட்டல் கேட்டால், உடனே பவர் ஸ்டாரின் முகத்தை பார்க்கவும்.

சந்தானத்தின் டைமிங் ஜோக்குகளும் பலத்த கைதட்டல் வாங்குகின்றன. பாடல்கள் உயிரை வாங்குகின்றன. சிம்பு கௌரவ தோற்றத்தில் அட்வைஸ் பண்ண வருகிறார். அவர் ஹீரோவாக நடித்த படங்களைவிட, கௌரவ நடிகராக நடித்த க.ல.தி.வா. அதிக நாள் ஓடப்போகும் படமாக இருக்கப் போகிறது.

முதல் நாள் தியேட்டர் ரெஸ்பான்ஸில் தெரியும் விஷயம், படம் உத்தரவாதமாக ஹிட்!