பதிவரின் மனைவிக்கு பெயர் ஹிட்டழகியா? பதிவுலகம் அதிர்ச்சி!

ஜாலினோ ஜிம்கானா காமெடி ஜிம்மி!

 

பதிவுலக நகைச்சுவை இளவல் சாம் ஆன்டர்சனும், சா(தா)தா பதிவரும் பேசிக்கிறாங்க

சாம் ஆன்டர்சன்: ஏலேய் தாதா பதிவரு, ஒனக்கு விசயம் தெரியுமா? அந்தப் பதிவரோட மனைவிக்கு ஏன் ஹிட்டழகின்னு பேரை மாத்தி வைச்சிருக்காங்க தெரியுமா?

சா(தா)தா பதிவர்: தெரியலைங்க. நான் பதிவுலகிற்கு புதுசில்லே!

சாம் ஆன்டர்சன்: அடப் போய்யா, ஹிட்டு பதிவு போட முன்னாடி சுட்டுப் போடுற பதிவுகளை அவங்க வூட்டுக்காரம்மா தான் கரெக்சன் பார்த்து கம்புசூட்டரில ஏத்தி கொடுப்பாங்களாம். அதற்கு பரிகாரமா பொண்டாட்டி பேரை மாத்திப்புட்டாரு.


பதிவர் மௌனகுருவும், தாமரைக் குட்டியும் பேசிக்கிறாங்க:

 

மௌனகுரு:ஏம்மா தாமரைக்குட்டி!பன்னிக்குட்டி அறிஞ்சிருக்கேன். யானைக்குட்டி அறிஞ்சிருக்கேன். பூனைக்குட்டி அறிஞ்சிருக்கேன். சிங்கம் மற்றும் புலிக் குட்டி கூட அறிஞ்சிருக்கேன். அது ஏன் உன் பேரு மட்டும் கொஞ்சம் வித்தியாசமா தாமரைக் குட்டீன்னு இருக்கே.

தாமரைக்குட்டி:அது வந்துங்க, இப்பூடி பப்ளிக்கில கேட்டிருக்கிறீங்க. வெளியே சொல்ல வெட்கமா இருக்குங்க.

மௌனகுரு:ஏலேய் சும்மா பில்டப்பு குடுக்குறதை விட்டுப்புட்டு மருவாதையா சொல்லிடு.

தாமரைக்குட்டி: அது வந்துங்க; என்னோட ஆளை கண்டதும் தான் என் முகம் மலருமுங்க. அதான் என் லவ்வரை சூரியனா நினைச்சுப்புட்டு, அவர் குட்டியா நான் இருக்கிறதால இப்படி ஓர் பேரை வைச்சுப்புட்டேன்.

 

பதிவர் ஹிட்டழகன் காட்டானும்,கட்டழகன் கனக வேலும் பேசிக்கிறாங்க:

 

ஹிட்டழகன்: ஏம்பா கட்டழகா; புதுசா ப்ளாக் எழுத வந்த பதிவர் கூட பேசிப் பார்த்தியா? அவருக்கு செம ஹிட்டு கிடைக்குதான்னு கேட்டியா?

கட்டழகன்: அடச் சே! நீங்க எல்லாம் மனுசனா சார்? அதையெல்லாம் அவனோட பொண்டாட்டி கூட இல்லே கேட்டு தெரிஞ்சுக்கனும். இப்போத் தான் கலியாணமே ஆகியிருக்கு. ஒரு மூனு மாசம் வெயிட் பண்ணிட்டு கேட்போமில்லே!!

டீக்கடைக்காரனும், வாடிக்கையாளரும்:

 

டீக்கடைக்காரன்: ஏனுங்க நாயர்;ஜெயாவும், சசிகலாவும் இரு துருவங்களாகிட்டாங்களே. பின்னாடி ஏதும் மர்மங்கள் இருக்குமா?

நாயர்: பின்னாடி என்ன இருக்குன்னு நமக்கு எப்படிப்பா தெரியும்? எல்லாம் அந்த நடராஜனுக்குத் தானே வெளிச்சம்!

 

ட்ரைவிங் மாஸ்டரும், மாணவன் மணியும்:

 

மாஸ்டர்: மிஸ்டர் மணி! இன்னைக்கு உன்னோட ட்ரைவிங் கிளாஸ் எல்லாமே முடிஞ்சிருச்சு. இனிமே தனியா கார் ஓடுவீங்க தானே.

மணி: சார், தனியா கார் ஓடுவது ஒன்னும் மேட்டரே இல்லைங்க. ஆனால் முன்னாடி இருக்கிறது ப்ரேக்கா இல்லை ஆக்ஸிலேட்டரா என்று தானுங்க டவுட்டு.

 

செல்லக் குறும்பு: 

என் அம்ஷிகாவின் வயசோ மூவாறு

அணைத்து முத்தம் கொடுத்த இடம் நாயாறு

பார்வையாலே இருவருக்கும் கோளாறு

வாந்தி எடுத்ததனால் வீட்டில் இப்போ தகராறு!

 இது நிரூபனின் படைப்பு அவரது அனுமதியோடு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

நன்றி